புதுடெல்லி: நில அரசு ஊழியர்களுக்கான பல்வேறு படிகளையும் கருணைத் தொகையையும் உயர்த்துவதாக மத்தியப் பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு மத்தியப் பிரதேச மாநில அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேச மாநில நிதித்துறையானது அரசு ஊழியர்களின் சலுகைகளை திருத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதில் அரசு ஊழியர்கள் இறந்த பிறகு அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத் தொகை, மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொழில்முறை அல்லாத சலுகைப் பணம், வீட்டு வாடகை, பயணப் படி, இரட்டைக் கடமை சலுகைப் பணம் போன்றவை அடங்கும்.
மத்தியப் பிரதேச அரசு புதிய நிதியாண்டில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைத் திருத்தி அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்படி, திருத்தப்பட்ட சலுகைகள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
மத்தியப் பிரதேச நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசுப் பணியில் இருக்கும்போது ஒரு அரசு ஊழியர் இறந்தால் இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறு மாத ஊதியத் தொகைக்கு சமமான, அதிகபட்சமாக ரூ.50,000 வரை கருணைத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மாநில அரசால் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர் ஒருவர் இறந்தால், இறந்தவரின் குடும்பத்திற்கு, 2017 ஊதிய திருத்த விதிகளின்படி, இறந்த அரசு ஊழியருக்கு வழங்க வேண்டிய சம்பளத்தின் ஆறு மடங்குக்கு சமமாக, அதிகபட்சமாக ரூ.1,25,000 வரை கருணைத் தொகை வழங்கப்படும்.