வாக்குச்சாவடியில் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் மோதல்; காவல்துறை தடியடி

வாக்குச்சாவடியில் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் மோதல்; காவல்துறை தடியடி

படங்கள்: தினத்தந்தி

09 Apr 2026 - 8:47 pm

1 mins read

புதுச்சேரி: 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9ஆம் தேதி நடந்தது.

மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் - பாஜக வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர். அத்தொகுதியில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் போட்டியிடுகிறார்.

திருக்கனூர் அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், பாஜக தொடண்டர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர்.

அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், “எதற்காக நீங்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். வாக்காளர் மட்டும் தான் இருக்க வேண்டும்; மற்றவர் இருக்கக்கூடாது,” என பாஜகவினரிடம் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறி இருதரப்பினரும் ஒருவொரையொருவர் தாக்கத் தொடங்கினார்.

அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த திருக்கனூர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டி கலைத்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அங்குக் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்