தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு, சிலர் உயிரிழந்ததாக அச்சம்

1 mins read
50fe9ed9-02ce-40f8-bad9-f8e327b3905a
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். - படம்: ஆகாஷ்வானி செய்தி ஜம்மு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஷ்தாவார் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) மிகப் பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டதில் ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

வருடாந்தர ‘மச்சைல் மாதா’ யாத்திரை செல்லும் வழியில் உள்ள சிஷோட்டி கிராமம் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் அந்தப் புனித யாத்திரையை மேற்கொள்வர்.

புனித யாத்திரைப் பாதையில் சிஷோட்டி கிராமத்துக்கு அப்பால் மோட்டார் வாகனங்களில் செல்ல இயலாது. வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு அதன் பிறகு நடந்து சென்றுதான் ‘மச்சைல் மாதா’ கோயிலை அடைய முடியும்.

அந்தக் கோயில் கடல்மட்டத்திலிருந்து 2.800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

மேகவெடிப்பைத் தொடர்ந்து புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் மிகப் பெரிய மீட்பு, நிவாரண நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

தேசியப் பேரிடர் நிவாரணக் குழுக்கள் இரண்டு அந்தக் கிராமத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கடந்த ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய புனித யாத்திரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை இடம்பெறும். அதை முன்னிட்டு அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகள் பலத்த சேதமடைந்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்