பீகாரில் 12 மாவட்டங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை

1 mins read
699ce5e6-5eb0-491d-9411-768eed93d9cd
பீகாரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஈஎன்எஸ்
multi-img1 of 2

பாட்னா: வட இந்திய மாநிலங்களில் குளிர் அலைகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, பீகார் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாள்களாக வட இந்தியாவில் பனிப்பொழிவும் குளிரின் தாக்கமும் அதிகரித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக, போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பீகாரில் குளிர் அலைகளின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால் மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, ஷியோஹர், மதுபானி, தார்பங்கா, முசாபர்பூர், சமஸ்திபூர், வைஷாலி, சரண், சிவன், கோபால்கஞ்ச் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 22ஆம் தேதி வரையில் குளிர் அலைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மீதமுள்ள 24 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பீகாரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்