மாணவரால் தாக்கப்பட்ட தலைமையாசிரியர் மரணம்

மாணவரால் தாக்கப்பட்ட தலைமையாசிரியர் மரணம்

1 mins read
0293c674-e59f-46d1-9b4b-0d0db56f3230
படம்: BM GROUP OF INSTITUTIONS/பேஸ்புக் -

இந்தியாவில் தனது கல்லூரியின் முன்னாள் மாணவரால்பெற்றோல் ஊற்றி மூண்ட தீயில் தலைமை ஆசிரியர் மாண்டார். ஐந்து நாள்களுக்கு முன், கல்லூரி வளாகத்தில் தாக்கப்பட்டு, அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீ மூட்டப்பட்டது.

தாக்கப்பட்ட 54 வயதான பேராசிரியர் விமுக்தா சர்மாவிற்கு உடல் முழுவதும் 90 விழுக்காடு தீப்புண் காயங்கள் ஏற்பட்டன. அவருடைய பல உறுப்புகள் செயல் இழந்ததாகவும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மாண்டதாகவும் அவருக்கு சிசிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிஎம் மருந்தகம் கல்லூரியின் முன்னாள் மாணவரான அஷுடோஷ் ஸ்ரீவஸ்தாவா, 24, தனது இறுதியாண்டு தேர்வில் தோல்வியடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அதற்கு பேராசிரியர் சர்மாதான் காரணம் என அஷுடோஷ் கருதினார். இதனால் சர்மாவை தாக்க அவர் முடிவு செய்தார்.

அஷுடோஷ்மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.