வர்த்தக சமையல் எரிவாயுக் கலன்கள் 50 விழுக்காடாக உயர்வு

வர்த்தக சமையல் எரிவாயுக் கலன்கள் 50 விழுக்காடாக உயர்வு

2 mins read
f79c8c54-18da-41aa-bc75-2a83062584d1
பெருநகரங்களில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், எரிவாயு விநியோகத்தில் மாநிலங்​களுக்குக் கூடு​தலாக 20% ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.  - கோப்புபடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: வணிகப் பயன்பாட்டுக்கா சமையல் எரிவாயுக் கலன்கள் ஒதுக்கீட்டை 50 விழுக்காடு உயர்த்தி உள்ளது இந்திய அரசு.

இதையடுத்து உணவகங்கள், சமுதாய உணவுக் கூடங்களுக்கு எரிவாயுக் கலன்கள் இனி தாராளமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், சமையல் எரிவாயு விநியோகம் அண்மையில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன்கள் போதிய அளவில் கிடைக்காததால் உணவகங்கள் செயல்படாத நிலை ஏற்பட்டது.

சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் 15% முதல் 30% உணவகங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன்களை விநி​யோகிக்க முன்​னுரிமை அளிப்​ப​தற்​காக வர்த்தக கலன்கள் விநி​யோகத்​துக்கு இந்திய அரசு கட்​டுப்​பாடு விதித்​தது. இதனால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

பெருநகரங்களில் வசித்து வேலை பார்த்து வந்த வெளிமாநிலத்தவர்கள் உணவுக்கு அல்லாட வேண்டியிருந்தது. இந்நிலையில், எரிவாயுக் கலன்களுக்கான முன்திவு செய்​வது குறைந்​து, வீட்டு உபயோகக் கலன்கள் விநி​யோகம் இயல்பு நிலைக்குத் திரும்​பி​யுள்​ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன்கள் விநி​யோகத்​தில் ஐந்தில் ஒரு பங்கு மீண்​டும் தொடங்​கிய பின்​பு, மாநிலங்​களுக்குக் கூடு​தலாக 10% ஒதுக்​கீடு செய்​ய​வும் குழாய் மூலம் எரிவாயு விநி​யோகம் செய்​யும் திட்​டத்தை விரைவுபடுத்​த​வும் மத்​திய அரசு அனு​மதி வழங்​கி உள்ளது.

பெருநகரங்களில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், மாநிலங்​களுக்குக் கூடு​தலாக 20% ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதன்மூலம் வர்த்தக எரிவாயுக் கலன்களுக்கான ஒதுக்​கீடு 50%ஆக உயர்ந்​துள்​ளது என்ற தகவல் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நிம்மதி அளித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பின் மூலம், இனி உணவு விடு​தி​கள், தொழிற்​சாலை உணவுக்கூடங்கள், உணவு பதப்​படுத்​தும் தொழிற்​சாலைகள், சமு​தாய உணவுக் கூடங்​கள் ஆகிய​வற்​றுக்கு எரிவாயுக் கலன்கள் தங்குத்தடையின்றிக் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்