புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பிரதமர் மோடியும் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் சில வழக்குகளில் ஜோடித்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, இந்தியாவில் ‘காமன்வெல்த்’ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அதை நடத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாகப் புகார்கள் எழுந்தன. அரசியல் களத்திலும் இந்த விவகாரம் புயலைக் கிளப்பியது.
இதையடுத்து, போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி உட்பட பலர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடுத்தது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இல்லை என்றும் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை ஏற்று, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “2ஜி வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் உண்மை வெளிவந்துவிட்டது.
“இந்த விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தியதற்கு மோடியும் கெஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்கவேண்டும்,” என்றார்.


