பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக ‘கிரோக் ஏஐ’ சித்திரிப்பதாகப் புகார்

1 mins read
8fd88360-9eb1-4d1f-a8c9-a1aa24fbe17d
‘கிரோக் ஏஐ’ குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கடிதம் மூலம் புகார் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்  பிரியங்கா சதுர்வேதி. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தின் கிரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து வெளியானப் பதிவுகளை 72 மணி நேரத்தில் நீக்குமாறு அந்நிறுவனத்துக்கு இந்திய அரசு கெடு விதித்துள்ளது.

இது குறித்து விரிவான அறிக்கையை அந்நாட்டின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சிடம் அந்நிறுவனம் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘எக்ஸ்’ பயனர்கள் சிலர் கிரோக் ஏஐயைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்களின் படத்தை ஆபாசமாகச் சித்திரிக்குமாறு கோரி, அதை அந்தச் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கடிதம் மூலம் புகார் அளித்தார்.

அதற்குத் தக்க நடவடிக்கை வேண்டுமெனவும் அவர் முறையிட்டார்.

இதையடுத்து, கிரோக் ஏஐ-யினை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள், பாலியல் ரீதியான படங்கள், காணொளிகள் ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என எக்ஸ் தளத்துக்கு இந்திய அரசு குறிப்பாணை அனுப்பியுள்ளது. இதற்கு 72 மணி நேரம் கெடுவும் அது விதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்