இந்தியா - பங்ளாதேஷ் எல்லை அருகே தங்கக் கட்டிகள் பறிமுதல்

இந்தியா - பங்ளாதேஷ் எல்லை அருகே தங்கக் கட்டிகள் பறிமுதல்

1 mins read
5d490aa8-fc26-403f-bb93-53aadab46ae0
பிடிபட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ஏறத்தாழ ரூ.45.03 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

கௌஹாத்தி: இந்தியாவுக்கும் பங்ளாதேஷுக்கும் இடையிலான எல்லை வழியாகக் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லை வழியாகப் போதைப்பொருள், தங்கம், வெடிபொருள்கள் போன்றவை கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த வகையில், அசாம் மாநிலம் கூச்பிகார் மாவட்டத்தில் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் எல்லைப் பகுதி அருகே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின்போது, மொத்தம் 583.410 கிராம் எடை கொண்ட ஐந்து தங்கக் கட்டிகள் பிடிபட்டன. இவற்றின் மதிப்பு ஏறத்தாழ ரூ.45.03 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தங்கக் கட்டிகள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கடத்தல் தங்கம்சட்டவிரோதம்சோதனைவிசாரணைஎல்லைபங்ளாதேஷ்இந்தியா

தொடர்புடைய செய்திகள்