காங்கிரஸ்: நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சினையை திசைதிருப்ப காங்கிரஸ் மீது பழிபோடுகிறது பாஜக

1 mins read
3c335e8d-91a3-405d-ac1e-1dd8b74aea63
கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின். - படம்: ஊடகம்

பெங்களூர்: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதிகார மாற்றம் அல்லது ஆட்சி மாற்றம் என்பது எதிர்க்கட்சித் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தி வரும் பதங்கள்.

“நாடாளுமன்றத்தில் அத்துமீறலில் ஈடுபட்டு கைதானவர்களில் ஒருவரான நீலம் ஆசாதை சந்தியுங்கள். அவர் ஒரு தீவிர காங்கிரஸ் இண்டியா கூட்டணி ஆதரவாளர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றிருக்கும் இவர் ஒரு கிளர்ச்சியாளர்,” என்று கூறியுள்ளார்.

அமித் மாளவியாவின் பதிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின், அமித் மாளவியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சினையைத் திசைதிருப்ப பாஜகவின் அமித் மாளவியா தீவிரமாக முயற்சி செய்துள்ளார்.

“நாடாளுமன்றத்தில் அத்துமீறியவர்கள் முஸ்லிம்களாக இருந்திருந்தால் கற்பனை செய்துபாருங்கள். மேலும், நாடாளுமன்ற நுழைவு அனுமதி வழங்கியது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள். இப்போது மோடி கோபக்கனல் கக்கியிருப்பார். அமித்ஷா நேரு மீது குற்றம் சாட்டியிருப்பார். பிரசாரர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் ராகுல் காந்தியைக் குற்றம் சாட்டியிருப்பார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்