பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமி மீது மரக்கட்டை விழுந்து பலி

1 mins read
c8daa3b3-1b2e-444f-8d60-9b1fe5198aee
கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த ஓர் ஆறுமாடிக் கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இருந்த மரக்கட்டை ஒன்று, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தேஜஸ்வினி மேலே விழுந்தது. - படம்: இணையம்

பெங்களூர்: பெங்களூரில் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி மீது கட்டுமானப் பொருள்கள் விழுந்ததில் அவர் பரிதாபமாகப் பலியானார்.

பெங்களூருவில் வி.வி.புரத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் தேஜஸ்வினி என்ற மாணவி, சனிக்கிழமை (ஜனவரி 4) பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அப்பகுதியில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த ஓர் ஆறுமாடிக் கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இருந்த மரக்கட்டை ஒன்று, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தேஜஸ்வினி மேலே விழுந்தது.

இதனையடுத்து, அவரை அப்பகுதியிலிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், தேஜஸ்வினி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கட்டுமானப் பணியில் அலட்சியமாக இருந்தது, கட்டுமான இடத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி, கட்டுமானப் பணியாளர்கள் மீது தேஜஸ்வினியின் தந்தை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்