தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெயர், புகைப்படத்தை நீக்க விக்கிபீடியா இணையத்தளத்திற்கு உத்தரவு

பெண்கள் பணி குறித்த அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் கண்டனம்

2 mins read
95bd4f0b-c174-4fb9-9d15-293a582161de
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் கூட்டக்குறிப்புகளை செய்தியாளர்களிடம் காட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. - படம்: ஊடகம்

கோல்கத்தா: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெயர், புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று விக்கிபீடியா இணையத்தளத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்தக் கூடாது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) விசாரணையைத் தொடர்ந்தது.

அப்போது, பெண் மருத்துவர்கள் இரவில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர். இரவுப் பணியை செய்வதை தவிர்க்குமாறு பெண் மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட முடியாது என்று அது கூறியது.

மேற்கு வங்க மாநிலம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலை நோக்கி, “மேற்கு வங்க அரசு அதன் அறிவிப்பை திருத்த வேண்டும், இரவில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே அரசின் கடமையாகும்” என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.

இதனையடுத்து, பெண் மருத்துவர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாகக் கட்டுப்படுத்தும் ஷரத்துகளை நீக்கி, அவர்களுக்கான இரவுப் பணியைத் தவிர்க்க வேண்டும் என்று ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரசு மாற்றங்களைச் செய்யும் என்று கபில் சிபல் ஒப்புக்கொண்டார்.

கோல்கத்தாவில் மருத்துவர்கள் சுகாதார அமைச்சுக்கு அருகே நீதி கேட்டு குந்தியிருப்புப் போராட்டம் நடத்தி வரும் அதேவேளையில், சாலையில் அவசர சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர். சாலையில் பல்மருத்துவர் நோயாளி ஒருவருக்கு பரிசோதனை செய்கிறார்.
கோல்கத்தாவில் மருத்துவர்கள் சுகாதார அமைச்சுக்கு அருகே நீதி கேட்டு குந்தியிருப்புப் போராட்டம் நடத்தி வரும் அதேவேளையில், சாலையில் அவசர சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர். சாலையில் பல்மருத்துவர் நோயாளி ஒருவருக்கு பரிசோதனை செய்கிறார். - படம்: இபிஏ

இணங்கினார் மம்தா

இதற்கிடையே, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்களின் கோரிக்கையை ஏற்று கோல்கத்தா காவல் ஆணையரை நீக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திங்கட்கிழமை ஒப்புக்கொண்டாா்.

மேற்கு வங்க காவல் துறை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மருத்துவப் பணிகள் இயக்குநா், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோரை மாற்றவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பேச்சுவாா்த்தையின்போது போராட்ட மருத்துவா்கள் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளில் மூன்றை அரசு ஏற்றுக்கொண்டது.

எனினும் ‘முதல்வா் மம்தா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்று பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மருத்துவா்கள் தெரிவித்தனா். செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இச்சம்பவம் தொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்