தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு: பீகார் தேர்தலில் லாலுவுக்குப் பின்னடைவு

1 mins read
0d5c8523-1813-4493-9085-296dcbe96166
மகன் தேஜஸ்வி யாதவ்வுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, மகன் ஆகியோர்மீது ஊழல் வழக்​கில் அக்டோபர் 13ஆம் தேதி குற்​றச்​சாட்டுச் பதிவு செய்​யப்​பட்​டது.

இது, நடக்கவிருக்கும் பீகார் தேர்தலில் லாலுவுக்கும் அரது குடும்பத்தினருக்கும் பெரும் பின்னடைவைக் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.

2004ஆம் ஆண்டிலிருந்து 2009ஆண்டு வரை இந்திய ரயில்வே அமைச்​ச​ராக ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத் யாதவ் செயல்பட்டார்.

அப்போது, இரு ரயில்வே ஓட்​டல்​களை பராமரிப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் சுஜாதா ஓட்​டலுக்கு வழங்​கப்​பட்​டது.

இந்த ஒப்​பந்​தத்​திற்கு லஞ்சமாக 3 ஏக்​கர் நிலத்தை லாலு பெற்​ற​தாக சிபிஐ குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

இந்த வழக்​கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது புதுடெல்லி சிறப்பு நீதி​மன்​றத்தில் குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யப்பட்டன.

அப்​போது தாங்​கள் குற்​றமற்​றவர்கள் என்றும் விசா​ரணையை எதிர்​கொள்ளத் தயார் என்​றும் அவர்கள் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், நிலத்​துக்கு ஈடாக ஓட்​டல் பராமரிப்பு ஒப்​பந்​தம் வழங்​கு​வ​தில் குற்​றம் சாட்​டப்​பட்ட மற்​றவர்​களு​டன் சேர்ந்து லாலு சதி செய்​ததும் அதி​காரத்தைத் தவறாகப் பயன்​படுத்​தி​யதும் முதற்​கட்ட விசா​ரணை முடிவு​களில் தெரிய வரு​வ​தாக நீதி​மன்​றம் குறிப்​பிட்​டது.

குறிப்புச் சொற்கள்