இந்தியாவில் நீரில் செல்லும் விமானம் ரிஷிகேஷில் வெற்றிகரமாகச் சோதனை

இந்தியாவில் நீரில் செல்லும் விமானம் ரிஷிகேஷில் வெற்றிகரமாகச் சோதனை

1 mins read
9a7602be-aaee-4720-983f-aa0874214282
ரிஷிகேசில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட இந்தியாவில் முதல் நீரில் செல்லும் விமானம். - படம்: இந்து தமிழ் திசை

ரிஷிகேஷ்: இந்தியாவில் நீரில் செல்லும் விமானம் ரிஷிகேசில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் ஏப்ரல் 6ஆம் தேதி வெற்​றிகர​மாகச் சோதிக்கப்பட்டது.

அந்நாட்டில் கடல் வழித்​தடங்களும் நீர்​நிலைகளும் அதி​க அள​வில் இருக்கின்றன. விமான நிலை​யம் அமைக்க முடி​யாத பகுதிகளில் நீரில் செல்லும் விமானப் போக்​கு​வரத்தை மேம்படுத்த அது திட்டமிடுகிறது.

அதன் ஒரு பகு​தி​யாக ரிஷிகேசில் நீர் விமானப் போக்​கு​வரத்தை ஏற்​படுத்த ‘ஸ்கை​ஹாப் ஏவி​யேஷன்’ என்ற நிறு​வனம் தயா​ராகி வரு​கிறது.

அந்​நிறு​வனத்​தின் முதல் நீர் விமானம், ரிஷிகேசில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் ஏப்ரல் 6ஆம் தேதி பரிசோதிக்கப்பட்டது.

கங்கை நதி​யில் சுமுகமாக அந்த விமானம் தரை​யிறங்​கி, மேலெழும்​பியதன் மூலம் அங்கு நீர் விமானப் போக்​கு​வரத்து சாத்​தி​ய​மாகும் எனக் கூறப்படுகிறது

“ரிஷிகேசில் நீர் விமானப் போக்குவரத்​துக்​கான சான்​றிதழ் பெறும் நடவடிக்​கை​யில் நாங்கள் இறங்​கி​யுள்​ளோம். ஒப்புதல் கிடைத்​தவுடன் வர்த்தக ரீதி​யாக நாங்​கள் அதைத் தொடங்​கு​வோம்,” என அந்நிறு​வனத்​தின் நிறு​வனர் அவானி சிங் கூறினார்.

லட்சத் ​தீவு பகு​தியிலும் ஸ்கைஹாப் நிறு​வனம் நீர் விமானப் போக்​கு​வரத்தைத் தொடங்கத் திட்ட​மிட்​டுள்​ளது.

அங்கு ஐந்து தீவுகளை இணைக்​கும் வகை​யில் 19 இருக்​கைகள் கொண்ட நீர் வி​மானத்தை முதல் கட்​ட​மாக இயக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்