தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உ.பி.யில் மதரசா சட்டத்தை அனுமதித்த நீதிமன்றம்

1 mins read
f66403d3-3856-40b4-a26d-374e3da9f1d5
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மதரசா கல்வி வாரியச் சட்டம் 200 செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடப்பில் இருந்­த இச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த மார்ச் மாதம் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது. மேலும், மதரசா மாணவர்களுக்கு முறையாகக் கல்வியில் இடமளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதுதொடர்பாக நடந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) தீர்ப்பு வழங்கப்பட்டது.

“உத்தரப் பிரதேச அரசு 2004ல் கொண்டு வந்த மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும். சமயச்சார்பின்மையின் அடிப்படைக் கட்டமைப்பை மீறியதற்காக மதரசா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அலகாபாத் உச்ச நீதிமன்றம் கூறியது தவறு. உ.பி. மதராசாக்களின் கல்வியின் தரத்தை அரசு ஒழுங்குப்படுத்த முடியும். அதேநேரம் கல்வித் தரம் தொடர்பான விதிமுறைகளில் மதரசாக்களின் நிர்வாகம் தலையிடக்கூடாது. மதரசாக்களுக்கான சட்டம் சில மதப் பயிற்சிகளை உள்ளடக்கியதாலேயே அது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல. இச்சட்டம் உ.பி.யில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதனால் உ.பி.யில் உள்ள 16,000 மதரசாக்கள், 2004 சட்டத்தின்கீழ் தொடர்ந்து செயல்படலாம்.

குறிப்புச் சொற்கள்