மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 6ஆம் தேதி வரை நீட்டிப்பு

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 6ஆம் தேதி வரை நீட்டிப்பு

1 mins read
c89c4ef5-633f-4e1f-86c8-466fe6a4dd38
டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்நிலையில் சிசோடியா மற்றும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் ஜூலை 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ், முன்னதாக தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்காலப் பிணை கேட்டு மனு செய்திருந்தார். நீதிமன்றம் அவரது பிணை மனுவை மே 20ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் இப்போது அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்