நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குத் தொடர நீதிமன்றம் உத்தரவு

1 mins read
ddcb5459-63d1-4a27-b642-a601d534b85b
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். - கோப்புப் படம்: இபிஏ

பெங்களூரு: தேர்தல் பத்திரம் முறைகேடு, மிரட்டி பணம் பறித்ததாக பாஜக தலைவர்களுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தல் பத்திரம் நடைமுறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தான் முக்கிய காரணம். தேர்தல் பத்திர நடைமுறையைக் கொண்டு வந்தது மத்திய நிதி அமைச்சகம்தான்.

இதனால் தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த அமைப்பைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரம் புகார் தொடர்பாக நிர்மலா சீதாராமன் உள்பட மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூர் திலக் நகர் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 10க்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்