நீதிமன்றங்கள் சமய நம்பிக்கையைச் சீர்திருத்த முடியாது: சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

நீதிமன்றங்கள் சமய நம்பிக்கையைச் சீர்திருத்த முடியாது: சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

2 mins read
4dc4300a-3d13-4e6b-8a86-51a38e47a7fe
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை கோயில். - படம்: பிடிஐ

புதுடெல்லி: நீதிமன்றங்கள் சமய நம்பிக்கையிலும் அதன் கோட்பாடுகளிலும் சீர்திருத்தத்தை முன்னெடுக்க முடியாது என புதன்கிழமை (ஏப்ரல் 29) உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனுமதித்த தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் பி.வி நாக ரத்தி​னா, எம் எம் சுந்​தரேஷ் ஆகியோரைக் கொண்ட ஒன்​பது நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் ​சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

ஏப்ரல் 29ஆம் தேதி நடந்த விசா​ரணை​யின் போது, கடவுள் நம்​பிக்​கையற்​றோர், கோயி​லில் விதிக்​கப்​பட்​டுள்ள சமய ரீதி​யான கட்​டுப்பாடு​களை எதிர்த்து வழக்கு தொடர முடி​யு​மா ? எனக் கேள்வி எழுப்பினார்.

தீர்ப்​புக்கு ஆதர​வாக​வும், தீர்ப்​புக்கு பிறகு சபரிமலைக்குச் சென்று எதிர்ப்​பு​களைச் சந்​தித்த கனக துர்​கா, பிந்து அம்​மினி ஆகியோர் சார்​பிலும் முன்னிலையான மூத்த வழக்​கறிஞர் இந்​திரா ஜெய்​சிங் வாதிடு​கை​யில், “நம்பிக்கை உள்​ளதோ, இல்​லையோ ஆனால் கோயிலுக்கு செல்லும் ​போது மரி​யாதை​யுடன் நடந்து கொள்ள வேண்​டும். சட்ட ரீதி​யான உரிமையை அவ்விரு​வரும் மீற​வில்​லை. சட்​ட ரீ​தி​யான உரிமையை மீட்​கவே போராடி வருகின்றனர்,” எனக் கூறினார்.

அப்​போது நீதிபதி எம்.எம்.சுந்​தரேஷ், “உங்​கள் வாதத்தை ஏற்​றுக்​கொண்​டால் ஒவ்​வொரு நம்​பிக்​கை​யாள​ரும் இப்​படி​தான் வழிபாடு இருக்க வேண்​டும் எனச் சொல்லத் தொடங்​கு​வார்​கள். அதற்கு முடிவே இல்​லாமல் போகும்,” எனக் குறிப்​பிட்​டார்.

மேலும், வேற்​றுமை​யில் ஒற்றுமையாக இருப்​பது தான் இந்தியாவின் பலம். 10 வயது முதல் 50 வயது வரை​யிலுள்ள உண்​மை​யான ஐயப்ப பெண் பக்​தர்​கள் சபரிமலைக்கு செல்​வ​தில்லை,” எனக் கூறினார்​.

அவ்வழக்கின் விசாரணை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்