அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அம்மாநில அமைச்சரவையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உட்பட 26 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த அனைவரும் இரு நாள்களுக்கு முன்பு பதவி விலகினர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
இதில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.
அமைச்சரவைப் பட்டியல் வெளியான ஒருசில மணி நேரங்களிலேயே புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அனைவருக்கும் அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குஜராத்தில் பாஜகவை வலுப்படுத்தவும் அனைத்து தரப்பினருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளதாக பாஜக தலைமை தெரிவித்துள்ளது.