தமிழகக் கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம்: தொடங்கியது ஆய்வு

தமிழகக் கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம்: தொடங்கியது ஆய்வு

1 mins read
a8efb7a3-63e9-4fa8-ac0a-df6e80fde4ab
இது தொடர்பான பணிகளைத் தொடங்க இந்திய அரசு ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. - கோப்புப் படம்: சினிமிண்டி

புதுடெல்லி: தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா எனக் கண்டறியும் ஆய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இந்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இந்த ஆய்வு நடைபெறும் என்றும் வங்கக் கடலை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வங்கக் கடலில் பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆய்வு நடைபெறும்.

வங்கக் கடல், பூர்ணியா, மகாநதி கடற்பரப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

இது தொடர்பான பணிகளைத் தொடங்க இந்திய அரசு ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.

உலகம் முழுவதும் எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு அருகேயுள்ள கடற்பகுதிகளில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்