தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கிரிப்டோ’ மின்னணு நாணய மோசடி; நடிகைகளிடம் விசாரணை

1 mins read
e02b173e-6862-454c-963a-62b011cfe087
கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனத்தின் திறப்பு விழாவில் நடிகை தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். - படம்: பிக்சாபே

புதுச்சேரி: ‘கிரிப்டோ’ மின்னணு நாணய மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

‘கிரிப்டோ’ மின்னணு நாணயத்தில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் கிட்டத்தட்ட 2 கோடியே 40 லட்சம் ரூபாய் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனத்தின் திறப்பு விழாவில் நடிகை தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனால், அவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவுசெய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்