4.3 கிலோ தங்கம் கடத்த முயற்சி; நால்வர் கைது

1 mins read
76ce9b9f-f999-4f25-a700-6d07e8a48a6c
மாதிரிப்படம்: - ஐஏஎன்எஸ்

கோழிக்கோடு: தங்கம் கடத்த முயன்றதாகக் கூறி, மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து வந்த நால்வர் திங்கட்கிழமையன்று (மே 27) இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோட்டிலுள்ள கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 4.3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அதன் சந்தை மதிப்பு ரூ.3.14 கோடி (S$510,200) எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் பசை வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்ததைச் சோதனையின்போது சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவர்கள் மற்றவர்களுக்காகத் தங்கத்தைக் கொண்டுவந்தனரா அல்லது தங்களது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்து வந்தனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, கேரளத்திலுள்ள நான்கு அனைத்துலக விமான நிலையங்கள் வழியாகத் தங்கம் கடத்துவது அதிகரித்திருப்பதை அண்மைய சம்பவங்கள் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் பெரும்பாலான சம்பவங்களில் பசை வடிவிலேயே தங்கம் எடுத்துவரப்பட்டதாகவும் அவ்வடிவில் தங்கம் இருந்தால் உலோக உணர்கருவியால் அதனைக் கண்டுபிடிக்க முடியாது எனப் பயணிகள் நம்புவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்