தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மூவர் மீது கொலைக்குற்றச்சாட்டு

அரிசி திருடியதாக தலித் அடித்துக்கொலை

2 mins read
16398673-1b0a-404e-8382-369822690c7e
திருடியதாக 50 வயது ஆடவர் கட்டிவைக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். - படம்: இணையம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில் அரிசி திருடியதாக 50 வயது தலித் ஆடவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

அந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைதாகக் கூடும் என்று காவல்துறை தெரிவித்தது.

அவர் மீது குற்றம் சாட்டிய கும்பல், அவரைத் தூணில் கட்டி வைத்து அடித்துக் கொன்றதாக அது குறிப்பிட்டது.

“துமர்ம்பள்ளி கிராமத்தில் உள்ள வீரேந்திர சிதார் என்பவரது வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) காலை, பூனி ராம் என்பவரின் மகன் பன்ச் ராம் சாரதி, திருடும் நோக்கத்துடன் நுழைந்ததாக தகவல் கிடைத்தது. அவர் பிடிபட்டு தாக்கப்பட்டார். இதனால் அவர் இறந்தார்,” என்று பிலாஸ்பூர் ரேஞ்ச் காவல்துறை ஆணையர் சஞ்சீவ் சுக்லா கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே, பலியானவர் திருடியதாக குற்றம் சாட்டிய கும்பல் அவரை கயிற்றால் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றதாக ராய்கர் மாவட்டத்தைச் சேர்ந்த மானிட உரிமைகள் ஆர்வலரான பிரசாத் சவுகான் என்பவர் குற்றம் சாட்டினார்.

ராய்கரில் திருட்டுக் குற்றத்திற்காக தலித் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது இது முதல் சம்பவம் அல்ல. முன்னதாக ராய்கர் மாவட்டம் லயிலுங்கா காவல் நிலையத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த அரவிந்த் சாரதி என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது மாவட்ட அமர்வுகளும் சிறப்பு நீதிபதியும் புலனாய்வுத் துறை விசாரணை நடத்துமாறு சத்தீஸ்கர் அரசை எச்சரித்திருந்தனர் என்று அவர் கூறினார்.்

குறிப்புச் சொற்கள்