பாட்னா: இந்தியா மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த ராணுவ, காவல் படை வீரர்களின் குடும்பங்களுக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று பீஹார் அரசாங்கம் வெள்ளிக்கிழமை (மே 16) அறிவித்துள்ளது.
முதலமைச்சர் நித்திஷ் குமார் தலைமைத்தாங்கிய அமைச்சரவை கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
“ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் உயிர்த் தியாகம் செய்த ராணுவத்தையும் மத்திய ஆயுத காவல் படையிலும் இருந்த பீஹாரைச் சேர்ந்த ஒவ்வொரு வீரர்களின் குடும்பங்களுக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது,” என்று அமைச்சரவை செயலாளர் சொன்னார்.
உள்துறை அமைச்சின் அந்தப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சட்டத்தின்படி ராணுவ, மத்திய ஆயுத காவல்படை வீரர்கள் இதர ராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக 21 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

