தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

2 mins read
9cfcaf76-fdcb-4c96-abb0-20f95fc7c4f3
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் இந்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷா. - படம்: ஊடகம்

டெல்லி: ராகுல் காந்தி நெஞ்சில் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற பாஜக நிர்வாகியின் மிரட்டல் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிந்து மகாதேவ் நேரடியாகவே ராகுலுக்கு மிரட்டல் விடுத்தார்.

வாய் தவறியோ, உணர்ச்சி வசப்பட்டோ மகாதேவ் பேசவில்லை, திட்டமிட்ட மிரட்டல் அது என காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கொலை மிரட்டல் விடுத்த மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்த பின்டு மகாதேவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென செல்வப்பெருந்தகையும் வலியுறுத்தியுள்ளார்.

“மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தொலைக்காட்சி நேரலையில் வெளிப்படையாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பின்டு மகாதேவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இத்தகைய கொலை மிரட்டலை ஒரு சாதாரண வாக்குவாதமாகவோ அல்லது உணர்ச்சி மிக்க பேச்சாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இது திட்டமிட்ட, வெளிப்படையான கொலை மிரட்டல் ஆகும்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியத்துவமிக்க எதிர்க்கட்சித் தலைவர் மீது, ஆளும் அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதி ஒருவர் இப்படிப்பட்ட கருத்தை வெளியிடுவது, இந்திய அரசியலமைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்த பின்டு மகாதேவுக்கு எதிராக உடனடி குற்றவியல் நடவடிக்கை மாநில காவல் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

“இவரின் கொலை மிரட்டல் பேச்சுக்கு பாஜக தலைமையில் உள்ளவர்கள், நாட்டு பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும்.

“எதிர்க்கட்சித் தலைவரிடம் இச்செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சு தன்னிச்சையாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

“அச்சுறுத்தல், அவதூறு மற்றும் அரசியல் அடக்குமுறையால் எதிர்க்கட்சிகளை மிரட்டும் அரசியல் கலாசாரத்தை இந்திய ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது.

“ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் மீது விடுக்கப்படும் ஒவ்வொரு அச்சுறுத்தலும், அவர் ஒருவரை மட்டுமே அல்ல மக்கள் உரிமைகள், அரசியலமைப்பு, ஜனநாயக மாண்புகள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதப்படும்.

“எந்த அளவு மிரட்டப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியும் இந்திய குடிமக்களும் சட்டபூர்வ ஜனநாயகப் போராட்டத்தில் இருந்து ஒரு அங்குலமும் பின்வாங்க மாட்டார்கள் என்பதை மத்திய பாஜக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்