துருக்கி, அசர்பை‌‌‌ஜான் செல்லும் இந்தியச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை சரிவு

1 mins read
d33a8a26-6497-470a-bd6c-0e22d69d339d
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் மூண்ட சர்ச்சையின்போது துருக்கியும் அசர்பை‌‌ஜானும் வெளிப்படையாகப் பாகிஸ்தானுக்கான ஆதரவை வெளிப்படுத்தியதை அடுத்து சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை வீழ்ந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

பாகிஸ்தான்மீது இந்தியா மேற்கொண்ட ஆப்பரே‌‌ஷன் சிந்தூரைத் தொடர்ந்து துருக்கி, அசர்பை‌‌‌ஜான் ஆகியவற்றுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கைக் கடுமையாகச் சரிந்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் மூண்ட சர்ச்சையின்போது துருக்கியும் அசர்பை‌‌ஜானும் வெளிப்படையாகப் பாகிஸ்தானுக்கான ஆதரவை வெளிப்படுத்தியதை அடுத்து சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை வீழ்ந்தது.

மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை அசர்பைஜானுக்குச் சென்ற இந்தியச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 56 விழுக்காடும் துருக்கிக்கான சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 33.3 விழுக்காடும் குறைந்தன.

அண்மை ஆண்டுகளில் அசர்பைஜானும் துருக்கியும் இந்தியச் சுற்றுப்பயணிகள் அடிக்கடி பயணம் செல்லும் சுற்றுலாத் தலங்களாக இருந்தன.

அந்த இரு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்லும் நேரடி விமானச் சேவைகளும் கணிசமாக அதிகரித்தன.

ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின்போது அசர்பைஜானும் துருக்கியும் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக அவற்றின் ஆதரவை வெளிப்படுத்தியது சுற்றுலாத் துறையில் பின்னடைவை அளித்தது.

மே மாதத்திலேயே இரு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்வோரின் முன்பதிவுகள் குறையத் தொடங்கின. ஏற்கெனவே செய்யப்பட்ட முன்பதிவுகளையும் சுற்றுப்பயணிகள் ரத்து செய்தனர்.

அத்துடன் துருக்கிக்கும் அசர்பைஜானுக்கும் விமானச் சேவைகளையும் ஹோட்டல் முன்பதிவுகளையும் வழங்கும் இந்தியச் சுற்றுலா நிறுவனங்களும் அந்த இரு நாடுகளுக்குமான சேவைகளை நிறுத்திக்கொண்டன.

குறிப்புச் சொற்கள்