தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விமானம் இழுவை வாகனத்தில் மோதியது

1 mins read
5671b1bf-f74f-4d78-968b-1897596be878
விமானப் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிக்கை ஒன்றில் பின்னர் தெரிவித்தது.  - படம்: பிக்சாபே

டெல்லி புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது பயணப் பெட்டி இழுவை வாகனம் ஒன்றை மோதியதைத் தொடர்ந்து, ஏறக்குறைய 200 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

மே 16ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவத்தில், விமானத்தின் இறக்கைகளில் ஒன்றும் டயரும் சேதமடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

விமானத்தில் கிட்டத்தட்ட 180 பயணிகள் இருந்தபோது சம்பவம் நடந்தது.

அனைத்துப் பயணிகளும் விமான ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏர் இந்தியா ஏஐ-858 ரக விமானம் புனேவிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.

விமானம் சேதமுற்றதால், பயணம் தாமதமானது. பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்குமாறு சிவில் விமானத் துறையின் தலைமை இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

விமானப் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா, அறிக்கை ஒன்றில் பின்னர் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்