தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லி தேர்தல்: ரூ.57 கோடி செலவிட்ட பாஜக

1 mins read
331bcb00-e2b9-4989-bb8c-796bad3805fd
தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றி பெற்றது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக ரூ.57.65 கோடி செலவிட்டது தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற இத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், தேர்தல் செலவுக்கான தொகையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளன.

இத்தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றி பெற்றது.

இம்முறை, ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசார, இதர நடவடிக்கைகளுக்காக ரூ.14.51 கோடியைச் செலவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளையில், பிரசாரத்துக்காக ரூ.39.15 கோடி செலவிட்டதாக, பாஜக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. மேலும், கட்சி வேட்பாளர்களுக்காக ரூ.18.51 கோடி செலவிட்டதாகவும், மொத்தமாக, ரூ.57.65 கோடி செலவானது என்றும் பாஜக கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி பிரசாரத்திற்கான பொதுச் செலவாக ரூ.40.13 கோடியும், கட்சி வேட்பாளர்களுக்கான மொத்தச் செலவாக ரூ.6.06 கோடியும் உட்பட மொத்தம் ரூ.46.19 கோடியை செலவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்