மேற்கு வங்கத்தில் 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிக்கை

மேற்கு வங்கத்தில் 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிக்கை

1 mins read
e7e9a812-3560-4ba9-b9f4-9c3b268f9ed2
மேற்கு வங்கத்தில் கடந்த புதன்கிழமை நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது சில வாக்குச் சாவடிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதனால் அந்தச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன. - படம்: இந்து தமிழ் திசை

கோல்கத்தா: மேற்கு வங்த்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஃபால்டா தொகு​தி​யில் 32, டைமண்ட் ஹார்​பரில் 29, மகராஹட்​டில் 13 மற்​றும் பஜ் பஜ் தொகு​தி​யில் 3 என மொத்​தம் 77 வாக்​குச் சாவடிகளில் மறு​வாக்​குப்​ப​திவு நடத்​த அரசியல் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்மீது திரவங்களை ஊற்றுதல், கண்காணிப்புக் கேமராக்களை மறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் சில கட்சிக்காரர்கள் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்​பாக, டைமண்ட் ஹார்​பர் பகு​தி​யில் உள்ள மகராஹட் பஸ்​சிம் தொகு​தி​யில், வாக்​காளர்​களின் சட்​டைப் பைகளில் ரகசிய கேம​ராக்​களைப் பொருத்தி அவர்​கள் யாருக்கு வாக்​களிக்​கிறார்​கள் என்​ப​தைக் கண்​காணிக்க முயன்​ற​தாகப் பதி​வாகி​யுள்ள புகார் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் உத்​தர​வின் பேரில், சிறப்​புப் பார்​வை​யாளர் சுப்​ரதா குப்தா சம்​பந்​தப்​பட்ட வாக்​குச் சாவடிகளில் நேரடி ஆய்வை மேற்​கொண்டு வரு​கிறார். வழக்​க​மாக மறு​நாளே நடத்​தப்​படும் ஆய்​வு​களைத் தாண்​டி, இம்​முறை கள நில​வரத்​தைத் துல்​லிய​மாக அறிந்து அறிக்கை சமர்ப்​பிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

அந்த ஆய்​வறிக்​கை​யின் அடிப்​படை​யில், மறு​வாக்​குப் ​ப​திவு குறித்த இறுதி முடிவை தேர்​தல் ஆணை​யம் எடுக்​கும் என்​று அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்