தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: மருத்துவர்கள்

1 mins read
d2eb4f25-8d65-4186-b259-7ee9c7bc2080
பெண் மருத்துவர் கொலை தொடர்பில் நீதி கோரி இளம் மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு இந்திய உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமையன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்று கோல்கத்தா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பு, உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை கோல்கத்தா மருத்துவர்கள் முன்வைத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கோல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயதுப் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதமாகிவிட்ட நிலையில், இதுவரை சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்