தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘த்வனி’ ஏவுகணை டிசம்பரில் சோதனை: மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும்

2 mins read
d9779f6b-e73f-4831-978f-6541a95dd64b
‘த்வனி’ ஏவு​கணையை முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கி உள்ளது இந்தியா.  - மாதிரிப்படம்: ஊடகம்

புதுடெல்லி: ஒலியைவிட ஆறு மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் ‘த்வனி’ என்ற ‘ஹைப்​பர்​சோனிக்’ ஏவு​கணையை முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கி உள்ளது இந்தியா. இது மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்​தில் சீறிப் பாயும் திறன் கொண்​ட​தாகும்.

வரும் டிசம்பர் மாதம் இந்த ஏவுகணை சோதனை செய்யப்படும் என்றும் மத்​திய பாது​காப்பு ஆராய்ச்​சி மற்றும் மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) இதைத் தயாரித்துள்​ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ‘பிரம்மோஸ்’ ஏவுகணைக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ‘த்வனி’ ஏவுகணை மூலம் இந்தியா தற்காப்புத் துறையில் புதிய பாய்ச்சல் காட்டியுள்ளது.

ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா​விடம் மட்​டுமே ‘ஹைப்​பர்​சோனிக்’ ஏவு​கணை​கள் உள்​ளன. இந்த வரிசை​யில் இந்​தி​யா​வும் இணைய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏறக்குறைய 9 மீட்​டர் நீளம், 2.5 மீட்​டர் அகலம் கொண்​ட ‘த்வனி’ ஏவுகணை, 6,000 கிலோ மீட்டர் முதல் 10,000 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்க முடி​யும்.

மேலும், மற்ற நாடுகளின் ஏவுகணைகளுக்கு இணையாக ‘த்வனி’ உருவாக்கப்பட்டுள்ளது.

“த்வனி ஏவுகணை முதலில் வானத்தை நோக்கி சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவைத் தாண்டிச் செல்​லும். வளிமண்​டலத்தைக் கடந்த பின்னர் விண்​வெளி​யில் இருந்து பூமியை நோக்கிச் சீறிப் பாய்ந்து நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்கை மிகத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும். இந்த வகை ஏவு​கணை​களை ரேடாரில் கண்​டறிவது கடினம்,” என்று டிஆர்​டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்​கா​வின் ‘தாட்’, இஸ்​ரேலின் ‘அயர்ன் டோம்’ ஆகிய வான் பாது​காப்புக் கவசங்களால்​கூட ‘த்வனி’ ஏவு​கணையை இடைமறித்து அழிக்க முடி​யாது என்றும் கூறியுள்ளனர்.

டிசம்பர் மாதம் நடத்தப்படும் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், எதிர்வரும் 2029ஆம் ஆண்டு ‘த்வனி’ ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்