இந்தியத் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு

இந்தியத் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு

படம்: என்டிடிவி

24 Sep 2026 - 7:12 pm

3 mins read

புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் சக தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது.

சக ஆணையர்கள் இருவரின் கடும் எதிர்ப்பையும் மீறி, தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக சில முடிவுகளை அமல்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையின்போது, கடந்த பத்து மாதங்களில் 14 முறை இரு ஆணையர்களும் தங்கள் எதிர்ப்பை முறைப்படி பதிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பப் படிவத்தில், அவர்களின் பெற்றோர் அல்லது தாத்தா - பாட்டியின் வாக்காளர் விவரங்களைக் கோரும் புதிய கேள்வி சேர்க்கப்பட்டது.

எவ்வித விதிமுறைகளும் இன்றிக் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றம் ‘சட்டவிரோதமானது’ என இரு ஆணையர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் மட்டுமே இருக்க வேண்டிய வாக்காளர் சேர்க்கை அதிகாரத்தை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத் தரவுத்தளத்தின் மூலம் மையப்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த அதிருப்தியின் காரணமாக, இரு தேர்தல் ஆணையர்களும் நாட்டின் அமைச்சரவைச் செயலாளருக்குத் தனித்தனியாகக் கடிதம் எழுதியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம், 2023ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையச் சட்டப்படி, ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் ஒருமனத்துடனோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஜனநாயக நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

ஏறக்குறைய 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே சர்ச்சை நிலவிவரும் சூழலில், தேர்தல் ஆணையர்கள் இடையேயான கருத்து வேறுபாடுகள் விவாதப் பொருளாகி உள்ளன.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வு உள்ளிட்ட சில அம்சங்கள் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் புகார் அளித்ததாகக் கூறப்படும் நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ‘இந்தியாவின் எதிரி’ என்று விமர்சித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே, திரு ஞானேஷ்குமார் தலைமையில் எடுக்கப்பட்ட அனைத்து தவறான முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையம் விளக்கம்

இதனிடையே, கருத்து வேறு​பாடு​கள் இருந்​தா​லும் அனைத்து முடிவுகளும் ஒரு​மன​த்துடனே எடுக்​கப்​பட்​ட​தாக தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்​கம் அளித்​துள்​ளது.

கடந்த பத்து மாதங்களில் நாடு முழு​வதும் வாக்​காளர் பட்​டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை நடத்​து​வது உள்ளிட்ட பல தேர்​தல் சீர்​திருத்​தங்​களை தேர்தல் ஆணையம் மேற்கொண்​டுள்​ளது என்றும் அவை அனைத்​தும் கடந்த ஓராண்​டில் ஆணை​யம் ஒருமனத்துடன் எடுத்த முடிவு​கள் என்றும் ஆணையத்தின் அறிக்​கை​யில் கூறப்பட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்