தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாப்கார்னுக்கு வெவ்வேறு வரி விதிப்பு: நிர்மலா சீதாராமன் விளக்கம்

2 mins read
1e7b8b54-a484-407a-a4d4-cd87ca3ef29f
வெவ்வேறு வகையான பாப்கார்னுக்கு வெவ்வேறு வரி என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், பாப்கார்னுக்கு வெவ்வேறு ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 55வது கூட்டம் சனிக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

உப்பு மற்றும் மசாலாப் பொருள்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5 விழுக்காடு, பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 விழுக்காடு, கேரமல் பாப்கார்னுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்தும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தற்போது அமலில் இருக்கிறது.

முன்னதாக ‘கிரீம்’ பன்னுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி முறை பெரியளவில் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது.

இந்த நிலையில், பாப்கார்னுக்கு வெவ்வேறு வகையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் பலர் கிண்டலுடன் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாப்கார்னுக்கு வெவ்வேறு வரி விதிக்கப்படுவது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

“கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், இனிப்பு பண்டங்களுக்கு விதிக்கப்படும் வகையில் அவற்றுக்கு 18 விழுக்காடு ‘ஜிஎஸ்டி’ விதிக்க முடிவு செய்யப்பட்டது. சாதாரண பாப்கார்ன், உப்பு வகை உணவுகளில் வருவதால் ஐந்து விழுக்காடு வரியும், அதுவே பேக்கேஜ் செய்யப்பட்டதாக இருந்தால் 12 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது,” என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்