சென்னை: மலேசியாவின் பினாங்கு மாநிலத்திற்கு சென்னையிலிருந்து நேரடி விமானச் சேவை டிசம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் இந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சோல், துபாய், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவை இருக்கிறது.
ஆனால் இந்தியாவுக்கு இதுவரை நேரடி விமானச்சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமானச் சேவையைத் தொடங்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை இந்தியாவிற்கும் மலேசிய மாநிலமான பினாங்கிற்கும் நேரடி விமானச் சேவை இல்லாத நிலையில், சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து மலேசிய மாநிலமான பினாங்கிற்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி தினசரி விமானச் சேவையை டிசம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
சென்னையில் இருந்து தினமும் அதிகாலை 2:15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் 4:30 மணி நேர பயணத்தில் பினாங்கு சென்றடையும்.
அதேபோல் பினாங்கில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10:30 மணிக்கு சென்னை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.