திமுகவிடம் ஆட்சியில் பங்கு: செல்வப்பெருந்தகை தகவல்

1 mins read
ce3ef981-3705-4120-875a-fe032fe9fa5d
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. - படம்: தினமலர்

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும் என்பதை மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “பல மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படுவதால் காங்கிரசுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. அண்மையில் பீகாரிலும் அப்படித்தான் நடந்தது. எனவே, தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கும் வகையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளோம்.”

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலையும் வங்கதேச இந்துக்கள் விவகாரத்தில் பிரதமரின் மௌனத்தையும் கடுமையாகச் சாடினார்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் விரைவில் தமிழகம் வரவுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் 80 விழுக்காட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்