காதலனின் ஆண் உறுப்பை வெட்டிய மாது

காதலனின் ஆண் உறுப்பை வெட்டிய மாது

1 mins read
e536af6f-001f-411b-a0e3-5d0a2da320ad
ஆடவர், பாட்னா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். - படம்: பிக்சாபே

பாட்னா: பீஹாரின் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் அவரது காதலனின் ஆண் உறுப்பை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

கொலை முயற்சி தொடர்பான பிரிவின்கீழ், காவல்துறை அவரைக் கைதுசெய்துள்ளது.

அந்த ஆடவர் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த ஆடவருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கள்ளத் தொடர்பு கொண்டிருந்ததாக அந்த மாது கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த ஆடவர் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவந்ததாகவும் அவர் சொன்னார்.

இறுதியாக நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்துகொள்ள அவரை இணங்க வைத்தார் அந்த மாது. இருப்பினும், அந்த ஆடவர் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.

இதனைத் தொடர்ந்து, அவர் அந்த ஆடவரைத் தமது வீட்டுக்கு அழைத்தார். ஆடவர் அங்குச் சென்றடைந்ததும், அந்த மாது அவரது ஆண் உறுப்பை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்