புதுடெல்லி: கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்துக்கு நாய் கொண்டு வந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரிக்கு உரிமை மீறல் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, விபத்தில் சிக்கிய நாயைக் காப்பாற்றவே எடுத்து வந்ததாகக் கூறிய அவர், “கடிப்பவர்கள் அவைக்குள் உள்ளனர்; நாய் கடிக்காது,” எனப் பேசியது பெரும் சர்ச்சையானது.
ரேணுகா சவுத்ரியின் பேச்சு இரு அவைகளிலும் உள்ளவர்களின் மரியாதையை இழிவுபடுத்துவதாக பாஜக எம்பிக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த விவகாரத்தில் தற்போது காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரிக்கு உரிமை மீறல் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து வரும் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ரேணுகா சவுத்ரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

