மது அருந்துவோருக்கு பெண்ணைத் திருமணம் செய்து வைக்காதீர்கள் என இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.
குடிப்பழக்கம் தன் மகனைக் கொன்றதை நினைவுகூர்ந்த மத்திய அமைச்சர், குடிகாரர்களுக்கு மகள்களை அல்லது சகோதரிகளை திருமணம் செய்து வைக்கவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடிப்பழக்கத்தால் தன் மகன் உயிரிழந்தது முதல் புகையிலை, மது இல்லாத நாட்டை உருவாக்கு வதற்கான இயக்கத்தை கௌஷல் கிஷோர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், எதிர்வரும் புத்தாண்டை போதையில்லா ஆண் டாகக் கொண்டாட வேண்டும் என்பதே தனது லட்சியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மது அருந்தும் ஒரு அதிகாரியை விட ஒரு ரிக்ஷாக்காரர் அல்லது கூலித் தொழிலாளி சிறந்த மணமகனாக விளங்குவார் என்றும் கௌஷல் கிஷோர் கூறினார்.
"இந்தியாவில் 272 மாவட்டங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக அரசு அடையாளம் கண்டுள்ளது. இதன் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும். விரைவில் நாடு புகையிலை, போதைப்பொருள், மது இல்லாத நாடாக மாறும்," என்றார் அவர்.


