குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்: கேரளாவில் அதிரடி உத்தரவு

குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்: கேரளாவில் அதிரடி உத்தரவு

1 mins read
59df2b82-0ed4-4df7-a3bc-740b2d2f5072
காவல்துறை மக்களை காப்பாற்றவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் துப்பாக்கியைப் பயன்படுத்தலாம் என்று கேரள மாநில ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். - படம்: ஒன்மனோரமா

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை, சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியுள்ளனர்.

அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் பயங்கர ஆயுதங்களால் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியிருக்கின்றனர். காவல்துறையின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் சில காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் கேரள மாநில ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், காவல்துறை மக்களை காப்பாற்றவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் துப்பாக்கியைப் பயன்படுத்தலாம். வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யப் போகும்போது காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்துச் செல்லவேண்டும். அப்போது அவர்கள் காவல்துறையைத் தாக்க முயன்றாலோ, தாக்குவதற்கு தயாராக இருந்தாலோ தற்காப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு காவல்துறை தயங்கக்கூடாது. காவல்துறையினரை தாக்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏடிஜிபி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்