அனைத்துலகக் கண் மருத்துவ அமைப்புத் தலைவராக தமிழக மருத்துவர் சூசன் ஜேக்கப்

1 mins read
2e31e0fa-28e0-4f9a-8716-f3e16ef7f24b
மருத்துவர் சூசன் ஜேக்கப். - இந்து தமிழ் திசை

சென்னை: அகர்வால் மருத்துவமனையின் முதுநிலை நிபுணர் சூசன் ஜேக்கப், கருவிழி ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான அனைத்துலக மருத்துவ அமைப்பின் (ஐஎஸ்ஆர்எஸ்) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 90 நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கெனவே மருத்துவர் அமர் அகர்வால் இப்பொறுப்பில் இருந்துள்ளார்.

கண்புரை, கருவிழி சிகிச்சையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சூசன் ஜேக்கப், உலக அளவில் தலைசிறந்த 10 கண் மருத்துவர்களுள் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்