ஹெலிகாப்டரில் பறந்த முதல் இந்திய அதிபர் திரௌபதி முர்மு

ஹெலிகாப்டரில் பறந்த முதல் இந்திய அதிபர் திரௌபதி முர்மு

1 mins read
1ded8c69-9d82-4e08-b812-9bfc703b7f2a
ராணுவ உடை அணிந்து ஹெலிகாப்டரில் பறந்த அதிபர் திரௌபதி முர்மு. - படம்: இந்திய அதிபர் மாளிகை

ஜெய்ப்பூர்: இந்திய அதிபர் திரவுபதி முர்மு, ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.

இந்திய அதிபர் ஒருவர் பாதுகாப்பு நிறைந்த விமானத்தைத் தவிர்த்து, ஹெலிகாப்டரில் பறந்து சென்றிருப்பது இதுவே முதல்முறை.

பிரசாந்த் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக ராணுவ ஹெலிகாப்டரில், இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே ஏறத்தாழ 25 நிமிடங்கள் அதிபர் முர்மு பயணம் செய்ததாக இந்திய ஊடகங்கள் கூறின.

ராணுவ அதிகாரி போல உடை மற்றும் தலைக்கவசம் அணிந்த அவர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்திலிருந்து புறப்பட்ட ராணுவத்தின் போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக ஹெலிகாப்டரில் பறந்ததாகக் கூறப்பட்டது.

போருக்குப் பயன்படுத்தக்கூடிய ஹெலிகாப்டரான பிரசாந்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் பாலைவனம் முதல் உயரமான பகுதிகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுபற்றிக் கூறிய அதிபர் முர்மு, “பிரசாந்த் ஹெலிகாப்டர் தன்னம்பிக்கையின் சக்திவாய்ந்த சின்னம். இந்த நேரத்தில், நான் ஜெய்சால்மர் மாவட்டத்தின் மீது பறக்கிறேன். நமது துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு அன்பான வணக்கம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்,” என்றார்.

இருநாள் பயணமாக அவர் ராஜஸ்தான் சென்ற வேளையில் ஹெலிகாப்டர் பயணம் அமைந்துள்ளது.

முதல்முறை ஹெலிகாப்டரில் பயணம் செய்த அதிபர் என்பதோடு, 2025 அக்டோபரில் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்திலிருந்து ரஃபேல் போர் விமானத்தில் பறந்த அதிபர் என்ற பெருமையும் அதிபர் முர்முவுக்கு உண்டு.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்