இந்திய பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருளை ஏந்தி வந்த வானூர்தி

1 mins read
84bf69dd-6d08-40b4-b331-ab07c3011a8f
படம்: இந்திய காவல்துறை/டுவிட்டர் -

இந்திய பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருளை ஏந்தி வந்த ஒரு வானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

வானூர்தி பஞ்சாப் எல்லையில் சனிக்கிழமை (மே 27) இரவு சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் அது தொடர்பாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் இந்திய அதிகாரிகள் கூறினர்.

வானூர்தி தானோ என்னும் கிராமத்திற்கு மேல் இரவு 9:35 மணிவாக்கில் பறந்ததாகவும், வித்தியாசமான சத்தத்தை கேட்டவுடன் அதிகாரிகள் அது குறித்து விசாரிக்கத் தொடக்கியதாகவும் கூறினர்.

அதன் பின்னர் அவர்கள் வானூர்தியை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தனர்.

வானூர்தி பறந்த சுற்றுவட்டாரத்தில் உடனடியாக சோதனையிட்டு ஒரு சந்தேக நபரை அதிகாரிகள் பிடித்தனர். அவரிடம் 3.4 கிலோகிராம் மதிப்பிலான போதைப்பொருள் இருந்தது. இருவர் தப்பியோடினர்.

பஞ்சாப்பில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த சில நாள்களாகவே இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. மே 27 சம்பவத்துடன் இது மூன்றாவது வானூர்தி கடத்தல் சம்பவம்.

குறிப்புச் சொற்கள்