தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
99ca55e9-5ce3-4418-800a-8638d13a1a15
சந்தேகநபர்களான மூவரையும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். - கோப்புப்படம்: பிக்சாபே

மும்பை: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து போதைப்பொருள் கடத்திச் செல்வதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், ஹாங்காங்கிலிருந்து மும்பை சென்ற பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின்போது இரண்டு பயணிகளிடமிருந்து 7.864 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 7.86 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர் இருவரையும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் மற்றொரு சம்பவத்தில் பேங்காக்கிலிருந்து மும்பை சென்ற விமானத்தில் ஒரு பயணியிடமிருந்து ரூ.11.9 கோடி மதிப்பிலான 11.922 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்