ஹரியானாவில் நிலநடுக்கம்: டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது

1 mins read
5df116bb-3ea5-46e9-b593-8516653c0b0c
டெல்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். - படம்: பிடிஐ

புதுடெல்லி: நிலநடுக்கம் காரணமாக டெல்லி மக்கள் மத்தியில் பீதி நிலவியது. ஏராளமான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.

வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 புள்ளிகளாக இந்த அதிர்வு பதிவானதாக தகவல்கள் தெரிவித்தன.

ஹரியானாவின் ஜஜ்ஜாரில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது தலைநகர் புதுடெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் குவிந்தனர்.

ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் பின்னர் உறுதி செய்தது. இது டெல்லியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும்.

டெல்லி, நொய்டா, காஸியாபாத், குருகிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்