தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ.588 கோடி பணம் பறிமுதல்

1 mins read
94c2d903-a522-4e95-a286-e8c285bd74c2
மகாராஷ்டிராவில் ரூ.90.5 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆபரணப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் 14 மாநிலங்களில் இடைத் தேர்தலும் இம்மாதம் நடக்கவுள்ளது.

அந்த தேர்தல்களுக்காக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.588 கோடி மதிப்பிலான பணம், பரிசுப்பொருள், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் ஆகியவற்றை இந்தியத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் வாக்காளர்களைக் கவர கட்சிகள் பணம் கொடுக்க முயற்சி செய்யும். அதைத் தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. அதன்படி அதிகாரிகள் பல குழுக்களை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிராவில் ரூ.90.5 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆபரணப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கமாக ரூ.73.1 கோடி கைப்பற்றப்பட்டது. மது மற்றும் போதைப் பொருள்கள் ரூ.38 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டன. வாக்காளர்களுக்குப் பரிசாக வழங்கப்படவிருந்த ரூ.42.5 கோடி மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

ஜார்க்கண்ட்டில் ரூ.128 கோடி மதிப்பில் இலவச பரிசுப் பொருள்கள், ரூ.10.5 கோடி ரொக்கம், ரூ.7.1 கோடி மதிப்பிலான மது பானங்கள், ரூ.4.2 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருள்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 மக்களவைத் தொகுதிகள், 48 சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.70.6 கோடி மதிப்பிலான பொருள், ரூ.21.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள், ரூ.9.4 கோடி மதிப்பில் தங்கம் என மொத்தம் ரூ.118 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்