தேர்தல் தோல்வி: ஆசிரம வாழ்க்கைக்குத் திரும்பிய பிரசாந்த் கிஷோர்

தேர்தல் தோல்வி: ஆசிரம வாழ்க்கைக்குத் திரும்பிய பிரசாந்த் கிஷோர்

1 mins read
6a419008-2d5f-4bb5-a47c-554d2bb1093e
தேர்​தல் வியூக ஆலோசகர், ஜன் சுராஜ் கட்​சித் தலைவர் பிர​சாந்த் கிஷோர். - படம்: இந்து தமிழ் திசை

பாட்னா: பல அரசி​யல் கட்​சிகளுக்குத் தேர்​தல் வியூக ஆலோசகராக இருந்​தவர் பிர​சாந்த் கிஷோர். அவர் ஜன் சுராஜ் என்ற கட்​சியைத் தொடங்கி பீகார் தேர்​தலில் போட்​டி​யிட்​டார்.

ஆனால் அவரது கட்சி ஓர் இடத்​தில் கூட வெற்றி பெற​வில்​லை.

இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து பீகார் தர்​பங்கா நகரில் திரு பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“நான் பாட்​னா​வில் உள்ள எனது இருப்பிடத்தை மாற்​றி, பாட்னா ஐஐடி பல்கலைக்கழகம் அரு​கே​யுள்ள ‘தி பீகார் நவ் நிர்​மான் ஆசிரமத்​துக்​கு’ வந்​துள்​ளேன். பீகார் மாநிலம் அடுத்த சட்​டப்​பேரவைத் தேர்​தலை சந்​திக்​கும் வரை நான் இங்கு தங்கியிருப்​பேன்.

“அடுத்த தேர்​தலில் ஜன் சுராஜ் கட்சி தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என நம்​பு​கிறேன். பீகார் வாக்​காளர்​கள் சாதி, சமயம், நிதி ஆதா​யத்​துக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​காமல், சொந்த நலனுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும்.

“பீகார் மக்கள் தங்​கள் குழந்​தைகளின் எதிர்​காலத்தை எண்ணி வாக்களிக்க வேண்​டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பீகார் அரசியல் தலைவர்கள் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரது அலை​யில் சிக்​கக் கூடாது.

“பெண்​கள் வேலை​ வாய்ப்புத் திட்​டத்​தின் கீழ் அளிக்​கப்​படும் ரூ.10,000 நிதிக்காக மக்கள் ஓட்​டுகளை விற்​கக் கூடாது,” என்று பிரசாந்த்​ கிஷோர்​ செய்தியாளர்களிடம் கூறினார்​.

குறிப்புச் சொற்கள்