தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீரில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

2 mins read
09b81aac-20ba-450c-83d5-4f6a238aedbc
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி. - கோப்புப்படம்: ஊடகம்

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்களைக் களமிறக்க காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் வரும் 4ஆம் தேதி தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றுகிறார். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள தூரு பகுதியில் உள்ள அரங்கத்தில் அவர் உரையாற்றுகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும் என்பது மக்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் விருப்பம். அதனால் ராகுல் காந்தி காஷ்மீருக்கு செப்டம்பர் 4ஆம் தேதி வருகிறார். தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார் என்று குலாம் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணிகளுக்காக 298 பிரிவுகள் துணை ராணுவப்படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் முன்னர் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஸ்ரீநகர், ஹந்த்வாரா, கந்தர்பால், புத்காம், குப்வாரா, பாரமுல்லா, பந்திபோரா, அனந்த்நாக், சோபியான், புல்வாமா, அவந்திபோரா, குல்காம் ஆகிய இடங்களுக்கு துணை ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்