திருவனந்தபுரம்: மத்திய கிழக்குப் போர் காரணமாக பயணக் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையிலும் கேரளத் தேர்தலில் வாக்களிக்க அம்மாநில மக்கள் இந்தியாவுக்குப் படையெடுத்துவருகின்றனர்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைநகர் அபுதாபி, துபாய் ஆகியவற்றிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புவதற்கான விமானக் கட்டணங்கள் வழக்கமாக 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய்வரை இருக்கும்.
மத்திய கிழக்குப் போரால் பல விமானச் சேவைகள் ரத்தாகியுள்ள நிலையில், பயணச்சீட்டுகளுக்கான தற்போதைய கட்டணம் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஒருசில விமானச் சேவைகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தவேண்டிய சூழல் நிலவுகிறது.
அப்படியிருந்தும் கேரளச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தாய்நாடு திரும்ப முடிவெடுத்துள்ளதாக பல கேரள மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் கேரள மக்கள் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் விமானப் பயணச்சீட்டுகளுக்கு 2 லட்சம் ரூபாய்வரை செலவுசெய்து கேரளாவுக்குத் திரும்பி வருகின்றனர்.
கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 140 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்களிப்பு இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
கேரள மாநிலத்தில் ஏறக்குறைய ச்க்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

