தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பற்றியெரிந்த கார்; நூலிழையில் உயிர்தப்பிய இருவர்

1 mins read
487939d0-5827-42c0-9970-b2b7d2c2c9cd
காருக்குள் இருந்த விலைமதிப்புமிக்க பொருள்களும் தீயில் சாம்பலானதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: ஐஏஎன்எஸ்

பெங்களூரு: சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மின்சாரக் கார் ஒன்று திடீரெனத் தீப்பற்றியதில், அதிலிருந்த இருவர் நூலிழையில் உயிர்பிழைத்தனர்.

சனிக்கிழமையன்று நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகத்தில் பரவியது. இச்சம்பவத்தால் மின்சாரக் கார் வைத்துள்ளவர்கள் கவலையடைந்துளனர்.

நண்பர்கள் இருவர் அக்காரில் பயணம் செய்ததாகவும் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு காரிலிருந்து புகை கிளம்பியதாகவும் காவல்துறை தெரிவித்தது.

விரைவில் அக்கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதனைக் கண்டதும் காருக்குள் இருந்த நண்பர்கள் இருவரும் விரைந்து வெளியேறினர். இதனால், அவர்கள் காயமின்றித் தப்ப முடிந்தது.

குறுகிய நேரத்தில் மளமளவென அவ்வாகனம் தீக்கிரையானது அதனைக் கண்டவர்களுக்கும் அவ்வழியே சென்றோர்க்கும் அதிர்ச்சி அளித்தது.

காருக்குள் விலைமதிப்புமிக்க பொருள்கள் இருந்தன என்றும் அவையும் தீயில் கருகி சாம்பலாகின என்றும் காவல்துறை தெரிவித்தது.

தீ விபத்து குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது,

குறிப்புச் சொற்கள்