தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷில்பா ஷெட்டி கணவர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

1 mins read
fc0f6fb7-694c-4685-9d0d-3a495da0322d
ராஜ் குந்த்ரா மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்கள் தயாரித்து அதை கைப்பேசிச் செயலியில் பதிவிறக்கம் செய்ததாகக் கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் உள்ளார்.

ராஜ் குந்த்ரா மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி மும்பை உள்ளிட்ட இடங்களில் ராஜ் குந்த்ரா வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் இந்தச் சோதனை நடந்து வருகிறது. மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

குறிப்புச் சொற்கள்